16 வயது மாணவியை பலாத்காரம் செய்த 42 வயது டியுஷன் வாத்தி கைது.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் தனியார் பயிற்சி வகுப்பில் 16 வயது மாணவி ஒருவருடன் உடலுறவு கொண்ட நாற்பத்திரண்டு வயதுடைய ஆசிரிரை நேற்று (25) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

பயிற்சி வகுப்பிற்குச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, பெற்றோரிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து, பெற்றோர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மேலும் பல மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாகவும், ஆனால் அந்த மாணவிகள் அதற்கு இணங்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இம்மாணவியை ஏமாற்றிய ஆசிரியர் , குறிப்பிட்ட மாணவியுடன் , சிறிது காலம் பாலுறவு தொடர்பு வைத்திருந்த நிலையில் , மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , சட்ட வைத்திய அதிகாரியிடம் பெறப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியரான, குறித்த ஆசிரியர் தனது ஓய்வு நேரத்தில் மானிப்பாய் பிரதேசத்தில் இந்த பயிற்சி வகுப்பை நடாத்தியுள்ளார்.மேலும் பயிற்சி வகுப்பு கட்டிடத்தில் உள்ள அறையொன்றில் மாணவியுடன் உடலுறவு கொண்டுள்ளார்.

மானிப்பாய் பொலிசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் உதவி வகுப்பு மாணவிகள் பலரிடம் விசாரணை நடத்தி வருவதுடன் சந்தேகத்திற்குரிய ஆசிரியரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.