சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்து கணவரை கொன்ற மனைவி கைது.

விஷம் கலந்து கணவனை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் அவரது மனைவி நேற்று (25) மாலை பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலியத்த, கொஸ்கஹாகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண்ணின் கணவரான 45 வயதுடைய பி.கயான் சந்திம குமார வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்த போது அவரது மனைவி தங்க முலாம் பூசுவதற்கு பயன்படுத்தப்படும் “போரம்” என்ற இரசாயனத்தை கலந்து அவரை குடிக்க வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

மது அருந்திய கணவர் சுகயீனமடைந்ததாகவும், தானே கணவரை பெலியத்த வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், அங்கு அவர் உயிரிழந்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

வீட்டில் மது அருந்தியபோது ஏற்பட்ட சுகவீனத்தால் கணவர் இறந்ததில் சந்தேகம் இல்லை என்றும், உடல் உறுப்புகள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உடலை அவசர பிரேத பரிசோதனை செய்து, குடும்ப உறுப்பினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகளும் முடிந்துள்ளன.

ஆனால் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பாகங்களை , பின்னர் பரிசோதனை செய்ததில், மதுவுடன் “போரம்” என்ற விஷ ரசாயனத்தை உட்கொண்டதே இந்த நபரின் மரணத்திற்கு காரணம் என தெரியவந்தது.

இதனடிப்படையில், பெலியத்த பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.