யாழ். மருத்துவமனைக்குள் புகுந்த மோட்டார் சைக்கிள் ஹீரோவுக்கு விளக்க மறியல் (Video).

நேற்று (28) யாழ். போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து வைத்தியசாலை ஊழியர்களை தாக்கிய இளைஞன் உட்பட இருவரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெட்டுக்காயங்களுடன் உள்ள ஒருவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் சினிமா பாணியில் நுழைந்து ஒருவர் அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர், மதுபோதையில் இருந்ததாகவும், வைத்தியசாலை ஊழியர்களிடம் நிதானமிழந்து நடந்து கொண்டமை வைத்தியசாலையின் சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரிடம், வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் எதற்காக வந்தீர்கள் என வைத்தியசாலை ஊழியர்கள் வினவிய போது, ​​அருகில் இருந்த பிரிண்டரை வைத்து வைத்தியசாலை ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான வைத்தியசாலை ஊழியர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்கள் தாக்கிய நபரை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர், தாக்குதலுக்கு உள்ளாகி மோட்டார் சைக்கிளில் காயங்களுடன் வந்த நபரும், கலகம் செய்த நபரும் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (28) யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் ஒரு பார்ட்டி நடத்தியதில் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறி ஒருவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக வந்த போதே , மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஹீரோயிசம் காட்டியுள்ளார். ஹீரோ மற்றும் காயமடைந்து வந்தவர் எதிர்வரும் யூன் 11ம் திகதி வரை விளக்க மறியலில் …

Leave A Reply

Your email address will not be published.