மாணவியின் நிர்வாண படங்கள் இணையத்தில் .. மாணவியின் காதலன் கைது..!

17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுகேகொட பிரதேசத்தில் உள்ள பயிற்சி வகுப்புக்கு செல்லும் போது 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே காதலன் மருந்து வகைகளை உட்கொள்வதை அறிந்து காதலருக்கு தீராத நோய் ஒன்று இருப்பது தெரிந்ததால் காதல் உறவை நிறுத்த பள்ளி மாணவி நடவடிக்கை எடுத்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் மாணவி வேறொரு இளைஞனுடன் காதல் உறவைத் தொடங்கியதை அறிந்த அந்த இளைஞன், காதல் உறவில் இருந்த காலகட்டத்தில், வீடியோ அழைப்புகள் மூலம் இணையத்தில் அவளது நிர்வாண புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்துள்ளார். அவற்றை இன்ஸ்டகிராம் வழி பகிர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைக் கண்ணுற்ற நண்பர்கள் பலர் , மாணவிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.