27 நாடுகளில் , ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று தொடங்கியிருக்கிறது.

ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் வாக்களிப்பு நடைபெறும்.

370 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

வாக்களிப்பு அடுத்த 4 நாள் நடைபெறும்.

எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் வாக்களிப்பு நடைபெறாது.

முதலில் வாக்களிப்பது நெதர்லந்து.

பெரும்பாலான நாடுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்களிக்கும்.

சில நாடுகளில் வாக்களிப்பு ஒரு நாள் மட்டும்தான். வேறு சிலவற்றில் அது 2 நாள் நீடிக்கும்.

ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையைப் பொறுத்து அதற்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அமையும்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பர்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் இரண்டாவது தவணையாக தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்வாரா என்பது தெரியவில்லை.

Leave A Reply

Your email address will not be published.