ஓரங்கட்டப்பட்டுள்ள ரத்தன தேரர் புதிய கூட்டணி அமைக்க முயற்சி.

விமல் வீரவன்ச, திலித் ஜயவீர மற்றும் சிங்கள தேசியவாதிகளின் பங்கேற்புடன் உதயமாகியுள்ள சர்வஜன அதிகாரம் என்னும் அரசியல் கூட்டணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ஓரங்கட்டப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

அவரை இந்தக் கூட்டணியில் இணைக்கக்கூடாது எனச் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இவ்வாறு ஓரங்கட்டப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

இதனால் புதிய தரப்புகளை இணைத்துக்கொண்டு கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் ரத்தன தேரர் ஈடுபட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.