பிரதமராக , மோடி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இந்தியாவின் பிரதமராகத் நரேந்திர மோடி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் சற்றுமுன் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்து மோடி அதிபர் திரெளபதி முர்முவைச் சந்திக்கவிருக்கிறார்.

நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி இரவு எட்டரை மணிக்குப் பதவியேற்புச் சடங்கு நடைபெறும்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் பேசிய மோடி அனைவரும் சமம் என்பதே அடுத்த அரசாங்கத்தின் தாரக மந்திரமாக இருக்கும் என்று கூறினார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் புதிய கூட்டணி அரசாங்கம் பற்றிக் குறிப்பிட்ட அவர் தேசம் முதலில் என்ற கொள்கைக்கே முன்னுரிமை தரப்படும் என்று சொன்னார்.

நல்லாட்சி, வளர்ச்சி, வாழ்க்கைத்தரம், சாதாண மனிதனின் வாழ்க்கையில் குறைவான குறுக்கீடு என்பதே அடுத்த பத்தாண்டுத் திட்டம் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.