ஆட்சியைத் தக்கவைத்தது ஆஸ்திரேலிய ஆளுங்கட்சி.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் , தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடியுள்ளார்.

அவரது தொழிலாளர் கட்சி 85 விழுக்காட்டு வாக்குகளைக் கைப்பற்றியதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முடிவுகள் வெளிவந்ததை அடுத்து மக்களிடம் பேசிய அல்பனிஸ், “நிச்சயமற்ற உலகச் சூழலில் ஆஸ்திரேலியர்கள் நம்பிக்கையையும் உறுதியையும் தேர்வு செய்துள்ளனர்,” என்றார்.

பிள்ளைப் பராமரிப்பை மலிவாக்குவதுடன் தேசிய உடற்குறையுள்ளோர் காப்புறுதித் திட்டத்தில் உள்ளோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று அல்பனிஸ் வாக்குறுதியளித்தார்.

புதிய திறனை வளர்க்க விரும்பும் ஊழியர்களுக்கும் கூடுதல் அரசாங்க ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பழைமைவாத மிதவாதக் கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தோல்வியை ஒப்புக்கொண்டார். அவர் சொந்த இடத்தையும் தேர்தலில் இழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.