அமெரிக்காவின் கூடைப்பந்து நட்சத்திரங்கள் இருவர் இலங்கைக்கு : ஒரு வாரம் தங்கியிருந்து பல பகுதிகளில் பயிற்சி பட்டறைகள்.

அமெரிக்க தேசிய கூடைப்பந்து (NBA) அணிகளை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்டீபன் ஹார்வர்ட் மற்றும் திருமதி அஸ்து ஞாய் ஆகியோர் இன்று (08) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் இம்மாதம் 14ஆம் திகதி வரையில் ஒரு வார காலம் தீவில் தங்கியிருக்கவுள்ளதோடு, இதன் போது தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களில் தொடர் கூடைப்பந்து பயிற்சி பட்டறைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

வடக்கு, ஊவா, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக இந்த செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவு, ஒற்றுமைக்காக விளையாட்டின் ஆற்றலைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பட்டறைகளை நடத்துகிறது.

இந்தப் பிரதிநிதிகள் இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம், தேசிய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களுடன் தமது நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதுடன் இலங்கையில் கூடைப்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.