சிறைச்சாலைக்குள் கோழி சமிந்தவுக்கு அடி உதை… அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி!

சோறு ஊட்டும் போது சிறுகுழந்தையை அவ்வப்போது கொடூரமாக தாக்கி ரிமாண்ட் செய்யப்பட்ட எம்.கே.சமிந்த அல்லது “குகுல் சமிந்த” அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நேற்று (07) கைதிகள் குழுவொன்றினால் தாக்கப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் மாற்றாந்தந்தை வெலிஓயா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிஓயா ஹன்சவில கிராமத்தைச் சேர்ந்த சந்தேகநபர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கைதிகள் குழு இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.