கடலில் தவறி வீழ்ந்து வைத்தியர் மரணம்! – காரைதீவில் மீண்டும் சோகம்.

அம்பாறை, காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி வீழ்ந்து நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர். கணித பாட முன்னாள் உதவிப் பணிப்பாளர் எஸ். இலங்கநாதனின் மூத்த புதல்வன் ஆவார்.

இவருடைய சடலம் மரண பரிசோதனைக்காக பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து இம்முறை மருத்துவத்துறைக்குத் தெரிவான காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை, லகுகல கடலில் தவறி வீழ்ந்து இறந்த சோகத்தில் இருந்து மீளாத காரைதீவு மக்களுக்கு மற்றுமொரு பேரிழப்பை இந்த வைத்தியரின் இழப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.