எங்களிடம் இதுவரை வேலைத்திட்டம் ஒன்று இல்லை.. தேர்தலை அறிவித்த பின் சொல்கிறேன்..- அனுர
தேசிய மக்கள் சக்தி இதுவரையில் விஞ்ஞாபனம் எதையும் வெளியிடவில்லை என அக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
லண்டனில் அக்கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேசிய மக்கள் சக்தி இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிடாத நிலையில் முறையான வேலைத்திட்டம் இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில் என ஒருவர் வினவிய போதே திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.