தமிழில் நடிக்க சென்னை வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி?

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழிலும் தெலுங்கிலும் கவனம் செலுத்த விரும்புகிறாராம்.

இதையடுத்து சென்னையிலோ, ஹைதராபாத்திலோ தொடர்ந்து ஆறு மாதம் தங்கி இருந்து வாய்ப்புகளைத் தேடுவதுதான் சரிப்பட்டு வரும் எனப் பலரும் ஜான்விக்கு அறிவுரை கூறியதாகத் தெரிகிறது.

எனவே, சென்னையில் வசிக்கும் தனது சித்தி லதாவின் வீட்டில் தங்கியிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஜான்வி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அனேகமாக, விஜய்யின் கடைசி படத்திலும், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் ஜான்வியை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.