வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை.

வங்கதேசம் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனையை படைத்துள்ளார். ஆன்டிகுவா மைதானத்தில் ஆஸ்திரேலியா – வங்கதேசம் இடையிலான சூப்பர் 8 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஷான்டோ 41 ரன்களும், ஹிரிடாய் 40 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் நட்சத்திர வீரர் பேட் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 17 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின் 18வது ஓவரை வீச பேட் கம்மின்ஸ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் அனுபவ வீரரான மஹ்மதுல்லா இன்சைட் எட்ஜாகி 2 ரன்களில் போல்டாகினார். இதன்பின் கடைசி பந்தில் மெஹதி ஹசன் டக் அவுட்டாகி வெளியேறினார். 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், கம்மின்ஸ் ஓவர் முடிவுக்கு வந்தது. இதன்பின் மீண்டும் கடைசி ஓவரை வீச அழைக்கப்பட்டார்.

அந்த பந்தில் கம்மின்ஸிற்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் பந்தை எதிர்கொண்ட ஹிரிடாய் ஸ்கூப் ஷாட் அடிக்க, அந்த பந்து நேராக ஹேசல்வுட் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதன் மூலமாக கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வீரர் பிரட் லீக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.