ராஜித, சம்பிக்க, பொன்சேகா , ரணிலோடு .. விழா வார இறுதியில்..அமைச்சு பதவிகள்..

ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா, SJB எம்.பி.க்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையப் போவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு பின்னர் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இவர்கள் ஜனாதிபதியுடன் இணைவது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் இந்த வாரத்தின் பிற்பகுதியில் நடைபெறவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய (25) தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடத்தப்பட உள்ள தேச மக்களுக்கான உரையின் பின்னர் இந்த அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.