அஞ்சலிக்காக ஆர். சம்பந்தனின் பூதவுடல் இன்று (02) பொரளை A.F. Raymond இல் …

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான
பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனின் பூதவுடல்

இன்று (02) செவ்வாய்க்கிழமை

பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில்
காலை 9 மணியில் இருந்து
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo

“Road Map”
👇
A.F. Raymond Map

புதனன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு

அவரது பூதவுடல் நாளைபுதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு
நாடாளுமன்றத்துக்கு எடுத்துவரப்பட்டு,
அங்கு  அஞ்சலியும் மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.

ஞாயிறன்று திருமலையில் சம்பந்தனின் இறுதிக்கிரியை!   

அதன்பின்னர் பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரது சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இறுதிக் கிரியைகளை அரச நிகழ்வாக நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டாலும் சம்பந்தன் ஐயா குடும்பத்தின் மத காலாசார முறைப்படி அது முன்னெடுக்கப்படும் என்றும், அதன் காரணமாக வழமையாக அரச நிகழ்வாக முன்னெடுக்கப்படும் இறுதி நிகழ்வுகளில் இடம்பெறும் இராணுவ மரியாதை நிகழ்வுகள் இதில் இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.