நயன்தாரா போட்ட கல்யாண கண்டிஷன்

நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. அடுத்ததாக இவர்களது திருமணத்தை தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நயன்தாரா தற்போதைக்கு தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை. படத்துக்கு படம் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் எப்படியாவது நயன்தாராவை திருமணம் செய்து விட வேண்டும் என தன்னுடைய காதலை பல்வேறு வகையில் காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நயன்தாராவுக்கு இப்போதைக்கு திருமணத்தில் எண்ணம் இல்லையாம். என்றைக்கு தேசிய விருது வாங்குகிறாரோ அன்று தான் திருமணம் என முடிவு செய்துவிட்டாராம்.

இதனால் விக்னேஷ் சிவன் கவலையில் இருக்கிறாராம். ஏற்கனவே இரண்டு காதலர்களை கடந்து வந்த நயன்தாராவை எப்படியாவது திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் சினிமா வட்டாரங்களில் நயன்தாரா ஒருமுறை திருமணத்தை தள்ளிப் போட்டால் பிறகு அந்த காதலருடன் இணைந்ததே இல்லை என குண்டை தூக்கிப் போட்டு விட்டார்களாம். இதனைக் கேட்ட விக்னேஷ் சிவன் பீதியில் இருக்கிறாராம்.

Leave A Reply

Your email address will not be published.