இம்மாதம் 21 ஆம் திகதி சூரிய கிரகணம்

ஜூன் மாதம் 21ம் திகதி இலங்கையில் சூரிய கிரகணம் தென்படுமென கொழும்பு பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த சூரிய கிரகணம் இரண்டு வருடங்களுக்கு பின்னரே இலங்கையில் தென்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

30 நாட்களில் 2 சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் தென்படுவது விசேட அம்சமாகும்.

கடந்த 5ம் திகதி சந்திரகிரகணம் ஏற்பட்டதுடன், அடுத்த மாதம் ஐந்தாம் திகதி மற்றொரு சந்திர கிரகணம் தோன்றவுள்ள அதேவேளை எதிர்வரும் 21ம் திகதி சூரிய கிரகணம் தென்படும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்துக்கு இணைவானதொரு சூரிய கிரகணம் ஒன்று எதிர்வரும் 21ம் திகதி தோன்றவுள்ளது.

மு.ப 10.29 முதல் பி.ப 1.19 வரை இந்த சூரிய கிரகணம் 3 மணித்தியாலயம் தென்படும்.

இந்த சூரிய கிரிகத்தை வெற்று கண்களால் பார்க்க வேண்டாம் என பேராசிரியர் சந்தன ஜயரட்ன மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

Comments are closed.