தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது – போக்குவரத்து அமைச்சர்

தற்போதைய சூழ்நிலையில் ஒரு போதும் தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்க போவதில்லையென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது கிடைக்கும் வருமானம் போதாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள போவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொது போக்குவரத்தில் ஆசனங்களுக்கு ஏற்றவாறே தற்போது பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் வருமானம் குறைவதனால் அரைசொகுசு பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 1.5 வீதம் வரை அதிகரிப்பதற்கு தனியார் பஸ் சங்கம் அமைச்சரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

ஆயினும் தற்போதைய சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாதென அமைச்சர் மகிந்த அமரவீர தனியார் பஸ் சங்கங்களிடம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.