கிளப் வசந்த கொலைக்குப் பின்னால் 70 கோடி பணம் – ஒரு பெரும் பணக்காரரைப் பின்தொடர்கிறது போலீஸ்.

கோடீஸ்வர தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தவின் கொலைக்கான காரணம் 70 கோடி பண தகராறு காரணமா என்பது குறித்து கொலைகளை விசாரிக்கும் புலனாய்வு குழுக்கள் கவனம் செலுத்தியுள்ளன.

மாகந்துரே மதுஷாவுக்கும் , கிளப் வசந்தாவுக்கும் இடையில் சில காலமாக இந்த தகராறு இருந்து வந்துள்ளது.

மாகந்துரே மதுஷ் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர் இலங்கையில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர்கள் துபாயில் இருந்த போது இந்த பண பரிவர்த்தனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், மாகந்துரே மதுஷ் மற்றும் கஞ்சிபானி இம்ரான் மிகவும் நெருங்கிய நண்பர்கள், இதனால் தற்போது பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி இருக்கும் கஞ்சிபானி இம்ரான் இந்த கொலையை இயக்கியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தென் மாகாணத்தில் உள்ள பணக்கார வர்த்தகர் ஒருவரின் ஊடாக கிளப் வசந்த என்பவருக்கு நேற்று முன்தினம் ஸ்தாபனத்தை திறப்பதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அதனடிப்படையில் அவரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.