கிளிநொச்சி வைத்தியசாலையில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் உலக சிறுவர் தினம் ஒக்டோபர் 1 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
“வளமான சிறார்களின் வளர்த்தெடுப்பு எதிர்காலத்திற்கான முதலீடு” எனும் தொனிப்பொருளில் அமைந்திருந்தது.
வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் இருந்த சிறுவன் கேக் வெட்டி இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அன்றைய தினம் வைத்தியசாலையில் இருந்த மற்றும் வைத்தியசாலைக்கு வருகை தந்த  சிறார்கள், பெற்றோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள், பிள்ளைகள் என பலரும் கலந்து விளையாடி மகிழ்வுற்றனர்.
சிறார்களுக்கான போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில், கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில் பொதிகள் வழங்கப்பட்டது.
உடல், உள மற்றும் சமூக ஆரோக்கியம் நிறைந்த சிறார்களை உருவாக்கவல்ல அன்பான, அழகான வீட்டுச் சுற்றாடலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய அவசியத்தை கலந்துகொண்ட பெற்றோர் ஏற்றுகொண்டு உறுதிபூண்டனர்.
சிறுவர் உரிமைகளை பேணி, அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு வித்திடும் சமூகத்தின் பங்குதாரர்களாவோம்.

Leave A Reply

Your email address will not be published.