வைகறை, நாவலர் அணிகள் அரையிறுதியாட்டத்திற்கு தகுதி

யாழ்.மாவட்ட தாச்சி விளையாட்டுச்சங்கத்தினால் அங்கத்துவக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற தாச்சிச் சுற்றுத் தொடரில் வைகறை அணி, சுதுமலை நாவலர் அணி அரையிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றன.
கைதடி குமரநகர் விளையாட்டுக்கழக மைதனத்தில் இடம் பெற்ற காலிறுதியாட்;டத்தில் வைகறை விளையாட்டுக்கழக அணிக்கும், பல்லசுட்டி காந்திஜி விளையாட்டுக்கழக அணிக்கும் இடையிலான ஆட்;டத்தில் வைகறை விளையாட்டுக்கழக அணி 6:4 என்ற பழங்களைப் பெற்று அரையிறுயாட்;டத்திற்கு தகுதி பெற்றது.
இரண்டாவது காலிறுததியாட்;டத்தில் சுதுமலை நாவலர் விளையாட்டுக்கழக அணிக்கும்,சங்கனை கீங் விளையாட்டுக்கழக அணிக்கும் இடையிலான ஆட்;டத்தில் சுதுமலை நாவலர் விளையாட்டுக்கழக அணி 12:1 என்ற பழங்களைப் பெற்று அரையிறுதியாட்;டத்திற்கு தகுதி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.