வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கை

கொரிய எல்லைகளை பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட வலயத்திற்குள் நுழைவதற்கு தயாராகவுள்ளதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் கொரியாவிலுள்ள எதிர்ப்பாளர் குழுக்கள், வட கொரியாவை விமர்சித்து அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை, அந்நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்புலத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தயாராகுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக வட கொரிய தலைவரின் சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் குறித்த வலயத்தை கோட்டையாக மாற்றியமைத்து இராணுவ சோதனைகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வட கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவை விமர்சித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதால், இரு நாடுகளுக்கிடையேயான தொடர்பாடல் சேவைகளை நிறுத்துவதற்கும் வட கொரியா ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது.

Comments are closed.