கடவுள் தந்த வரம் – ட்ரம்ப் டிவீட்

சர்ச்சைப் பேச்சுகளால் புகழ் பெற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது   டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர்
”எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள கடவுளின் மறைமுக ஆசியாகவே நினைக்கிறேன்.  கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கடவுள் கற்றுக் கொடுத்துள்ளார். கொரோனாவை உருவாக்கி அமெரிக்கா மற்றும் உலகத்துக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலையை தர நேரிடும்” என்று பேசிவுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகிய இருவ்ருக்கும் கடந்த 1-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  ஆயினும் டிரம்புக்கு காய்ச்சல் அதிகமனதால் அடுத்த நாளே வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருகுத் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  இந்நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

Leave A Reply

Your email address will not be published.