100 கர்ப்பிணி பெண்கள் உட்பட 275 பேர் அபுதாபியிலிருந்து அழைத்து வரப்படுகிறார்கள்

அபுதாபியில் இருந்து மொத்தம் 275 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று இலங்கைக்கு வர உள்ளனர். அவர்களில் 100 கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஒரு நோய்வாய்ப்பட்ட பெண் உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தில் 1200 க்கும் மேற்பட்டவர்களை பதிவு செய்திருந்தனர்.

முதலில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு இன்று (17) அழைத்து வரப்படுகிறார்கள்.

Comments are closed.