உத்தரவை மீறி வவுனியாவில் இயங்கும் கல்வி நிலையங்கள்.

உத்தரவை மீறி வவுனியாவில்
இயங்கும் கல்வி நிலையங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் கல்வி நிலையங்களையும் மூடுமாறு அரசு அறிவித்துள்ளது. ஆயினும், இந்த அறிவித்தலை மீறி வவுனியாவில் பரவலாக தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்றன என்று பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தாக்கத்தையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியற் கல்லூரிகள் என்பனவும் மூடப்பட்டுள்ளன. அரசின் முக்கிய திணைக்களங்களின் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பல மாகாணங்களில் தனியார் கல்வி நிலையங்களையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் வவுனியா மாவட்ட அரச அதிபர் உள்ளூராட்சி திணைக்களம் ஊடாக தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு தெரிவித்திருந்தார். ஆனாலும், வவுனியாவின் பண்டாரிக்குளம், கூமாங்குளம், வைரவபுளியங்குளம், தோணிக்கல் போன்ற பகுதிகளில் சில தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சில மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வதால் அங்கு பாடத்திட்டம் முன்னோக்கி நகரும் என்பதால் அங்கு கற்ற அனைத்து மாணவர்களுகம் கொரோனா அச்சத்துடன் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.