இன்று நடைபெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்.

ஹாலிஎல பகுதியில் விபத்து! இளைஞர் படுகாயம்!!

பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலிஎல பகுதியில் இன்று காலை (15/10)
லொறியொன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார், அவர் பதுளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

லொறியின் சாரதி ஹாலிஎல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.