7 மலையக எம்.பிக்கள் 20 இற்கு கடும் எதிர்ப்பு – இருவர் மட்டும் ஆதரவு

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளது.

அத்துடன், 20 ஐ எதிர்த்து நிச்சயம் வாக்களிப்பேன் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அதேவேளை, 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எழுவர் 20 ஐ எதிர்க்கும் அதேவேளை, இருவர் ஆதரிக்கின்றனர்.

மனோ கணேசன் (ஜனநாயக மக்கள் முன்னணி), வே.இராதாகிருஷ்ணன் (மலையக மக்கள் முன்னணி), பழனி திகாம்பரம் (தொழிலாளர் தேசிய முன்னணி), வேலு குமார் (ஜனநாயக மக்கள் முன்னணி), அ.அரவிந்தகுமார் (மலையக மக்கள் முன்னணி, எம்.உதயகுமார் (தொழிலாளர் தேசிய முன்னணி), வடிவேல் சுரேஷ் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் 20 இற்கு எதிராக வாக்களிக்கவுள்ளார்கள்.

ஜீவன் தொண்டமான் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்), மருதபாண்டி ராமேஷ்வரன் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) ஆகியோர் மட்டும் 20 இற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.