மலையாள திரைப்பட நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா

மலையாள திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர் பிரித்விராஜ்.  இவர் தமிழில் கனா கண்டேன் என்ற படத்தில் அறிமுகம் ஆனவர்.  பின்னர் மொழி, ராவணன் ஆகிய பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில், ஜன கன மன என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இதற்கான படப்பிடிப்பில் கடந்த 7ந்தேதியில் இருந்து அவர் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் உறுதிப்படுத்தி உள்ளார்.  அதில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை நாங்கள் கடுமையாக கடைப்பிடித்தோம்.  பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.
விதிகளின்படி, படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம்.
இதன்பின்னர் படப்பிடிப்பின் இறுதி நாளன்று முடிவில், பரிசோதனைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன.  இதில், இந்த முறை எனக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.
எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை.  நலமுடனே இருக்கிறேன்.  என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளும்படியும், பரிசோதனை மேற்கொள்ளும்படியும் கேட்டு கொள்கிறேன்.
குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்புவேன்.  என் மீது அன்பு கொண்டவர்களுக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்து உள்ளார்.  இதேபோன்று பட இயக்குனர் டிஜோ ஜோஸ் அந்தோணிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.