சுவிட்சர்லாந்தின் இராணுவத் தலைவர் தோமஸ் சுஸ்லி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

சுவிஸ் ராணுவத் தளபதிக்கு கொரோனா!

சுவிட்சர்லாந்தின் இராணுவத் தலைவர் தோமஸ் சுஸ்லி கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சுவிஸ் ராணுவத் தலைவர் தாமஸ் சுஸ்லி கொரோனாவுக்கு இலக்கானதாக பெடரல் ஊடக அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், அடுத்த சில தினங்களுக்கு தாமஸ் சுஸ்லி வீட்டில் இருந்தபடியே அலுவல்களை தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைடையே சூரிச் மண்டலத்தில் சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்களில் புதிதாக தலா 500-கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது வெள்ளிக்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட குறைவு என்றாலும், அதற்கு முந்தைய நாட்களைவிட அதிகமாகும்.

சனிக்கிழமை 540 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ஞாயிறு அன்று இந்த எண்ணிக்கை 526 என பதிவாகியுள்ளது.

ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் 715 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.