19 தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பு! – 9 பேர் ஆதரவு

9ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 19 பேர் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், 9 பேர் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (10), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (02), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (01), தமிழ் முற்போக்குக் கூட்டணி (அரவிந்குமார் தவிர 5 பேர்) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் எம்.பி. வடிவேல் சுரேஷும் எதிராக வாக்களித்தனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், மொட்டுக் கட்சியில் உள்ள எஸ்.வியாழேந்திரன், தேசியப் பட்டியல் எம்.பி. சுரேன் ராகவன் ஆகியோரும் 20 இற்குச் சார்பாக வாக்களித்தனர். அரவிந்குமார் எம்.பியும் இந்தப் பட்டியலில் இணைந்தார்.

9 ஆவது நாடாளுமன்றத்துக்கு மக்களின் அங்கீகாரத்துடன் 25 உறுப்பினர்கள் தெரிவாகினர். தேசியப் பட்டியல் ஊடாக மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.