வவுனியாவில் தனியார் கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா.

பதுளையில் ஒருவருக்கு கொரோனா.

வவுனியாவில் தனியார் கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த நபர் பதுளை ஹுனுகொட்டுவ பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் கடந்த நாட்களில் தமது வீட்டுக்கு சென்றுள்ளதாகவும் விசாரணைகளைில் தெரியவந்துள்ளது.

இதன்படி, தொற்றுக்கு உள்ளான குறித்த நபர் கடந்த 8 ஆம் திகதி பதுளைக்கு சென்றுள்ளதுடன், 11 ஆம் திகதி பதுளையில் உள்ள இரண்டு ATM இயந்திரங்களில் பணப்பறிமாற்றத்திலும் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபர் பதுளை நீதிமன்ற கட்டதொகுதிக்கு வந்துள்ளதுடன், அங்கு சட்டத்தரணி ஒருவரையும் சந்தித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் அந்த நபர் வவுனியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் வவுனியாவில் குறித்த நபருக்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான குறித்த நபருடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளரின் வீட்டில் உள்ளவர்கள் தற்போதைய நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதுளை சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.