வடமாராட்சி கடல் நீரேரியில் இன்னுமொரு திட்டம் ஆரம்பம்.

வடமாராட்சி கடல் நீரேரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்னுமொரு திட்டம் ஆரம்பம்

வடமாராட்சி கடல் நீரேரியில் நன்னீர் மீன் வளர்ப்பை விருத்தி திட்டத்தின் அடிப்படையில் சுமார் 40,000 மீன் குஞ்சுகள் இன்று(23.10.2020) வைப்பிலப்பட்டுள்ளன.

அம்பன், குடத்தனை பொது மண்டபத்தில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், முதற் கட்டமாக 1 இலட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், மீதி மீன் குஞ்சுகள் எதிர்வரும் நாட்களில் வைப்பிலிடப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய, குறித்த பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்வதன் ஊடாக எதிர்காலங்களில் பருவ கால மாற்றம் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வதார சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் குறித்த திட்டம் நடைமுறைப்படுப்பட்டுள்ளது.

களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்தினை நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தவுள்ள நிலையில், குறித்த திட்டத்தின் மூலம் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்னுமொரு திட்டம் ஆரம்பம்

Leave A Reply

Your email address will not be published.