மட்டக்களப்பு மாவட்ட தரை பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தணமடு,மாதவனை மேச்சல் தரை பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது

 

இன்று காலை கொழும்பு பத்தரமுல்ல மகாவலி அபிவிருத்தி அமைச்சில்  நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் கௌரவ சமல் ராஜபக் அவர்களின் தலைமையில் மகாவலி காணி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 

இதில் மயிலத்தணமடு, மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடபட்டது.

 

இக்கூட்டத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் செயலாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி  இராஜாங்க அமைச்சர் திரு.வியாளேந்திரன் , பா.உறுப்பினர்களான கருணாகரன், சாணக்கியன், மற்றும் சார்ல்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் & கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகியோரும் மகாவலி, நீர்ப்பாசன, விவசாய திணைக்கள அதிகாரிகளும் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

அந்த வகையில் முதல் கட்டமாக உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை சோளம் பயிர் செய்கைக்கு வழங்குவதை தடுத்து நிறுத்தி குறித்த விடயம் சம்பந்தமாக  ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

இப்பிரச்சனைகளை ஆராய்வதற்கான குழுவில்  TMVP கட்சியின் பொதுச்செயலாலர் பிரசாந்தன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் அடங்கலாக பாராளூமன்ற உறுப்பினர்களான கருணாகரன் மற்றும் சாணக்கியன் உட்பட அதிகாரிகள், பண்ணையார்கள், சிவில் சமூக பிரதிநிதி என பலரையும் உள்ளீர்த்து அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்க விடயம்.

 

குறித்த குழுவினர் எதிர்வரும் 02.11.2020 குறித்த பிரதேசத்திற்கு களவிஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.இதன் போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
  • Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.