“காஷ்மீர் தீவிரவாதிகள் இலங்கைக்கு? கட்டுநாயக்காவில் பரபரப்பு சோதனை!”

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று பாதுகாப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆறு பேர் ஒரு விமானத்தில் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்ற முன்னறிவிப்பின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
சென்னைவில் இருந்து வந்த விமானமொன்றில் அந்த சந்தேகநபர்கள் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையால், சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன என்றும் விமான நிலைய தரப்பில் கூறப்பட்டுள்ளது.