“அதிவேக நெடுஞ்சாலையில் மே தின பஸ்களை நிறுத்தியமைக்காக – போலீசார் மேல் நடவடிக்கை!”

மே தின ஊர்வலங்களுக்கு வந்த பஸ்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அதிவேக நெடுஞ்சாலை காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெலிபன்ன பகுதியில் பஸ்கள் நிறுத்தப்பட்டதோடு, அதில் பயணிகள் இறங்கி உணவு எடுத்துக் கொள்வது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும்,
மிக அவசர சூழ்நிலையில் , வாகனத்தில் பழுது ஏற்பட்டால் கூட, வாகனத்திலிருந்து வெளியேற கூடாதென விதிமுறைகள் கூறுகின்றன.
மே தின ஊர்வலங்களுக்கு வந்த பஸ்கள் அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி உணவருந்த இடமளித்த சம்பவம் தொடர்பாக, , சில போலீசாரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.