தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் – மக்களிடம் கோருகின்றார் ஆனந்தசங்கரி.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், வேறுபாடுகளை மறந்து தேர்தலின் பின்னர் அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைய வேண்டும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உள்ள அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை ஊடக சந்திப்பை நடத்திய வேளை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொறுப்புக்களைப் பகிர்ந்து ஏற்க அனைவரும் ஒற்றுமையாக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.