எதிர்க்கட்சிகளைத் திரும்பிப் பார்க்கமாட்டோம் தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு.

எதிர்க்கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கைகோர்த்து சபைகளை நிறுவப்போவதில்லை என்று அந்தக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளருமான ரில்வின் சில்வா இன்று புதன்கிழமை ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தனிநபர்களின் சுயாதீனக் குழுக்களைத் தமது கட்சி பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற சபைகளில் ஆட்சியை நிறுவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்ற ஏனைய கட்சிகள் அந்தந்தச் சபைகளில் ஆட்சியை நிறுவ வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.