சொன்னதைச் செய்திருந்தால் பிமல் நாடாளுமன்றில் அழத்தேவையில்லை – மொட்டுவின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் சாடல்.

மதுபானசாலை அனுமதிப் பட்டியலை வெளியிட்டிருந்தால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கசிப்பு விநியோகம் குறித்து நாடாளுமன்றத்தில் அழத்தேவையில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில் இலங்கைத் தமிழிரசுக் கட்சி தேர்தலில் வெல்வதற்காகக் கசிப்பு விநியோகம் செய்துள்ளது எனும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்துக் குறித்து பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பாக கீதநாத் காசிலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர் பிமல் ரத்நாயக்க தற்போது நாடாளுமன்றச் சிறப்புரிமையின் பின்னால் ஒளிந்து கொண்டு, வாக்குகளை வெல்ல “தமிழ்க் கட்சிகள் கசிப்பு மற்றும் இலஞ்சம்” வழங்குகின்றார்கள் எனக் குற்றம் சுமத்துகின்றார். ஆனால், இதே பிமல் ரத்நாயக்க சார்ந்த தேசிய மக்கள் சக்தி, கடந்த அரசின் கீழ் மதுபான அனுமதிகள் பெற்ற சில வடக்கு எம்.பிக்களின் பட்டியலை வெளியிடப் போவதாகத் தேர்தலுக்கு முன் வாக்களித்தது.

இப்போது, அந்தப் பட்டியலை வெளியிடுவதை அவர் சார்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியே தடுக்கின்றது.

குறித்த பட்டியல் வெளியாகியிருந்தால், இன்று பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் அழ வேண்டிய நிலைக்கு வந்திருக்கமாட்டார். இன்னும் தாமதமாகிவிடவில்லை. நீங்கள் வாக்குறுதி செய்தபடி அந்தப் பட்டியலை வெளியிடுங்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.