காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை – பிரதமர் மோடி

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் அறிவித்த டிரம்ப்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளும் சமரச பேச்சுக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இதனையடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தன. ஆனால் அதன் பிறகும் பாகிஸ்தான், சிறிய அளவில் அத்துமீறலில் ஈடுபட்டாலும் பெரியளவிலான தாக்குதல் நடைபெறவில்லை.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் மகிழ்ச்சியான முடிவு என்றாலும், இதில் அமெரிக்காவின் தலையீடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதனையடுத்து, பிரதமர் மோடி முப்படைகளின் தலைமை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

மத்தியஸ்தம் தேவையில்லை
இதை தொடர்ந்து, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம், தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி பல்வேறு முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஜே.டி.வான்ஸிடம் பேசிய மோடி, “பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது.

எல்லைக்கு அப்பால் பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒப்பந்தம் நிறுத்தப்படும். ஆபரேஷன் சிந்தூர் முடியவடையவில்லை. இயல்பு நிலையில் இருக்கிறோம்.

பாகிஸ்தான் தாக்கினால் நாங்களும் தாக்குவோம். இந்த விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை பயங்கரவாதிகளை ஒப்படைப்பது பற்றி பேசினால் பேசுவதற்கு தயார்” என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.