மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி .

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. இந்ந நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பயங்கரவாத அமைப்புகள் சில ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வடக்கு புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அல் கொய்தா பின்னணி கொண்ட பயங்கரவாத அமைப்புகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.