வாவியில் மூழ்கி இரு சிறுமிகள் பரிதாப மரணம்!

விடுமுறைக்காக உறவினரின் வீடொன்றுக்குச் சென்ற 17, 12 வயது சிறுமிகள் இருவர் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று பகல் குருநாகல் மாவட்டம், கல்கமுவ பகுதியில் உள்ள பாழுகடவல வாவியில் நீராடிக்கொண்டிருந்த வேளையிலேயே இருவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி சாவடைந்துள்ளனர்.
கம்பஹா மற்றும் இரத்தினபுரி பகுதிகளைச் சேர்ந்த சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களின் சடலங்கள் கல்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.