பாடசாலை மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் ஆங்கிலப் பாட ஆசிரியர் கைது.

மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் மாத்தறை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பாடசாலையில் கடமையாற்றும் 38 வயதுடைய ஆங்கிலப் பாட ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.