நுவரெலியாவில் மீண்டும் விபத்து! – 11 பேர் காயம்.

அண்மையில் பஸ் விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டி எல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு விபத்து சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று மாலை நுவரெலியா – கொழும்பு பிரதான வீதியில் வான் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சுவசெரிய அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
“பெரிய சத்தம் ஒன்று கேட்டு, வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். மூன்று சிறுவர்கள் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதைப் பார்த்தேன்.” – என்று விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த 42 வயதுடைய நபர் தெரிவித்துள்ளார்.