தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்திப் பவனி – யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பம்.

தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்று புதன்கிழமை ஊர்திப் பவனி ஆரம்பமானது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஊர்திப் பவனி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது.

“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.