பருத்தித்துறை முனைக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் நேற்று பருத்தித்துறை முனை கடற்கரையில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கட்சியின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளுக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.