வடக்கின் அதிகாரிகள் பலருக்கு ஒரே நாளில் அதிரடி இடமாற்றம்!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் 22 பேருக்கு வடக்கு மாகாண ஆளுநர் அதிரடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
19 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள் என 22 பேருக்கு இந்தக் கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் ஜெகாநந்தன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, உடனடியாக கல்வி அமைச்சில் பொறியியலாளராக இருந்த அபிராமி வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.