கெஹலியவின் மகனும் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரமித் ரம்புக்வெலவின் தந்தையான கெஹலிய ரம்புக்வெல இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காகக் கடந்த 7ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியபோது ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் இலஞ்சம், ஊழல் வழக்கில் ரமித் ரம்புக்வெல நேற்று நீதிமன்றத்தால் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட நிலையில், இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரமித் ரம்புக்வெலவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி ரமித் ரம்புக்வெல இன்று காலை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆரஜாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல அமைச்சின் நிதியிலிருந்து சுமார் 8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.