நல்லூர் முன்றலில் அசைவ உணவகம்: பெயர்ப் பலகையை அதிரடியாக அகற்றியது யாழ். மாநகர சபை!

நல்லூர் ஆலய முன்றலில் யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர்ப் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய முன்றலில் யாழ். மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்துக்கான அனுமதிகளைப் பெறுமாறு மாநகர சபை உணவகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அனுமதி இன்றி உணவகத்துக்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர்ப் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் சில சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் யாழ். நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நல்லூர் ஆலயச் சூழலில் புனிதத் தன்மையைப் பேணும் வகையில் குறித்த உணவகத்தை அகற்றக் கோரி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்று புதன்கிழமை மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.