வடக்கு, கிழக்கு காணிப் பிணக்கு: பிரதமர் தலைமையில் கலந்தாய்வு.

வடக்கு, கிழக்கு காணிப் பிணக்கு தொடர்பான கூட்டம் பிரதமர் ஹரிணி அமரதுங்க தலைமையில் இன்று முற்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
இந்த விசேட கூட்டத்தில் விவசாய அமைச்சர் லால் காந்த, சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.